கருப்பும்,வெள்ளையும் கலந்த
ஆட்டுக்குட்டியின்
கழுத்தைக் கட்டிக்கொள்ளும்
அம்முகுட்டிக்கு
அதன் நிறம் குறித்த
குழப்பங்கள் ஏதும் இல்லை
வீடும்,மரங்களும்
வானமும் வரைந்த
அம்முகுட்டி
மேகத்திற்கு பிங்க் நிறம் தீட்டி
வெட்கப்படுகிறாள்.
பச்சையில் ஒன்றும்
ப்ளூவில் ஒன்றுமாய்
இரு வேறு காலணிகள்
அணிந்து கொண்ட
அம்முகுட்டி
ஆடைக்கு மேட்ச் என
சிரிக்கிறாள்.
கட்டித்தழுவிட முனைகையில்
காற்றை கைகளால் துழாவிய
அம்முகுட்டி
நிறமற்று
கரைந்து போகிறாள்.
-ப்ரவீணா