Wednesday, July 21, 2021

நல்லதை பேசுங்க.. !

 காலைல வானொலியில்,பாடல்களுக்கு நடுவே சில பொதுவான  கேள்விகள் கேட்பாங்க அதற்கு நேயர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துப்பாங்க. எப்பவும் கேட்பதுண்டு எப்போதாவது என் கருத்தை பகிர்ந்து கொள்வதும் உண்டு. சில சமயங்களில் மொக்கையான  கேள்விகளாக கூட இருக்கும் பங்கேர்க்கும் நேயர்களின் பதில்களால் சுவாரசியமாக மாறுவதும் உண்டு. 


இன்றைய கேள்வியாக, வீடு, நட்பு, உறவு,அலுவல்களில் புறணி பேசப்படுகிறதா ?? அது தவறு என்பதை உணர்கிறார்களா புறம் பேசுபவர்கள்... எனக் கேட்கப்பட்டது. காலைல வேலையாக இருந்ததால நான்  கருத்து பகிர்ந்துக்கல.. ;) 


 நிறையா பேர் நிறையா பகிர்ந்துகிட்டாங்க.. ஆனா எல்லோருமே சத்தியவான்களா மற்றவர் புறங்கூறியதாகவும், தாங்கள் ஒரு போதும் அவ்வாறான செயல்களை செய்வதில்லை என்பது போலவுமே இருந்தது அவர்களது கருத்து. 


மிக சிலரே கேள்வியின் ஆழத்தை புரிந்து கொண்டு பதிலளித்ததாக தோன்றியது. யாரு என்ன பேசினா எனக்கென்ன என்பது போல் இருந்திட யாருக்கும் வாய்ப்பதில்லை. சிலர் பேசியது வியப்பை தந்தது. சாதாரண கேள்வியையும் அரசியலோடு ஒப்புமைபடுத்தி, புறங்கூறலினால் அரசு எவ்வாரெல்லாம் வீழ்ந்து போகும் எனவும்.. நல்ல தலைமைக்கழகு நல்சொற்களைக் கேட்டல் என்பதையும் கருத்துக்களாக பகிர்ந்து கொண்டனர். 


அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போது, எனக்கு தோன்றிய சில கருத்துகள் : 


* புறங்கூறுபவர்களை விட அதை கேட்டு அதன் படி நடப்பவர்களே மிகுந்த ஆபத்தானவர்கள் நம்பிக்கையற்றவர்கள்.


*புறம்  பேசுபவர்களை ஒரு போதும் திருத்த முடியாது.


* புறம் பேசுதலால் எவ்வித நன்மையும் அடைந்திட முடியாது ( அப்போதைக்கு அவர்களுக்கு நல்லது நடக்கற மாதிரி இருக்கும் ஆனா இருக்காது )


புறம் பேசுபவர்களுக்கு கற்பனை வளம் மிகுந்திருக்கும் ;) 


புறம்பேசுவர்கள் ஒரு விஷயத்தை தவறாக சித்தரித்து, அடுத்தவரிடம் போய் சொல்லும் போது கேட்பவர் அவர் இயல்புக்கேற்றவாறு தவறாக புரிந்து கொண்டு எதிர் விணை ஆற்றும் பொழுது பல சிக்கல்கள் உருவாகின்றன. 


வீட்டிலோ, நட்பிலோ, உறவிலோ, அலுவலங்களிலோ நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில் அச்சிக்கலால் சிதைவு ஏதும்  ஏற்படாமல் காக்கப்படுகிறது.  புரிதல் இல்லாத இடத்தில் உறவு நீட்டிப்பதில்லை.


//பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.//  


அததான் வள்ளுவரும் சொல்லிருக்காரு... ;) 


நல்ல சொற்களை பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவங்க குறைய சொல்லி  உறவை பிரிப்பாங்கன்னு... :/ 


நல்லது பேச ஆயிரம் இருக்கும் போது அதையும் இதையும் ஏன் போட்டுகுடுத்து பேசுவானேன்.. அதால


 நல்லதை பேசுங்க நல்லதை மட்டுமே பேசுங்க... :)

2 comments:

  1. நீங்க எழுதியதா....???? 👌👌👌👌👌

    ReplyDelete
  2. அழகு உண்மை நம்பியவர்களே சில சமயம் புறணிக்கு முக்கியத்துவம் குடுத்து அதன்படி நடந்து மனதை நோகடிப்பது குஷ்டமப்பா.

    ReplyDelete