Sunday, October 24, 2021

வாசனை


 எப்போதும் 

எங்கேயும்

ஒரு வாசனை...

யாரோவொருவரை

ஞாபகத்தின்

துணுக்குகளில்

உதிர்த்துச்செல்கிறது.


ஈரச்சாக்கில்

மூட்டைகட்டி

கருவேப்பிலையை

ஏற்றிசெல்லும்

வாகனத்தினை

கடந்து செல்லும்

போதெல்லாம்,

வாசல் திண்ணையில்

அழுக்கு கூடையில்

அடுக்கிவைக்கப்பட்ட 

கீரையின் ஓரத்திலிருந்து

கொசுறாய் கொஞ்சம்

கருவேப்பிலை உருவி தரும்

அவளுக்கு,

அத்தணை பொருத்தமாய்

இருந்தது

கருவேப்பிலையின்

வாசனை...


முறுக்கிக்கொண்டே

திரியும் அவனுக்கென்று

பிரித்யோக வாசனையொன்று

இருந்தது..

வாலாட்டிக்கொண்டே வரும்

நாய்க்குட்டியின்

ப்ரியத்தினை

ஒத்திருக்கும்...


கரைந்த ஹாமாம் 

சோப்பின் வாசனையிலும்

பாண்ட்ஸ் பவுடரின் 

வாசனையிலும்,

ஏதோவொரு

முகம்

தோன்றி காற்றில்

மறைந்து

நினைவுகளை நீட்டிச்செல்லும்..


அத்தனை நினைவுகளையும்

உறையச்செய்யும்

ஒரு வாசனை..

ஆறுலாய் தலை கோதி

முன்நெத்தி முத்தமிட்டு

செல்லும் அந்த வாசனை

அப்பாவின்

வாசனையை

ஒத்திருந்தது

அப்பா இறந்த பின்னும்..!!


-ப்ரவீணா

No comments:

Post a Comment