பார்வையில் விலகி,
சொற்களில் பிரிந்து,
வெகுதூரம் சென்றபின்னும்
நினைவுகளில் ஏன்
நெருங்குகிறாய்..?
ஞாபங்களின்
அடுக்குகளில்
ஒவ்வொன்றாய்
களைந்த பின்னும்
மிச்சமிருப்பது,
முதல் முத்தமோ
முதல் ஸ்பரிசமோ
முதல் சொல்லோ
அல்ல
கடைசி நொடி
தீன்டலும்
கடைசியாய்
உதிர்த்த
சொல்லொன்றும்
எல்லாம்
முடிந்து
பிரிகையில்
விட்டு சென்ற
பார்வையில்
திக்கி நிற்கிறேன்
மீண்டும்
ஒருமுறை
இறப்பதற்கு..!!
❤️
ReplyDeleteயார்ன்னு தெரியலயே இருந்தாலும் நன்றி
Delete💚💚
ReplyDelete<3
Delete